Project Recover - Olirum Madurai - Sri Durga School

 


அன்பார்ந்த பெற்றோர்களுக்கு வணக்கம். 🙏 

 ஒளிரும் மதுரையின் "Project Recover" திட்டத்தின் மூலம், மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மறுசுழற்சி செய்தல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் விழிப்புணர்வு வகுப்புகள் ஸ்ரீ துர்கா மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் நோக்கம், குழந்தைகளுக்கு வெறும் அறிவை மட்டுமல்லாமல், இயற்கையை நேசிக்கும் மனப்பான்மையையும், சமூகத்தின் மீது அக்கறையையும் உருவாக்குவதாகும். 

 வீடுகளில் உருவாகும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை, குழந்தைகள் சேகரித்து ஒப்படைப்பதன் மூலம், குழந்தைகள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் செயல்பாட்டில் நேரடியாக பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். 

 மாணவர்களின் ஈடுபாட்டையும் முயற்சியையும் பாராட்டும் வகையில், அவர்கள் சேகரித்து வழங்கும் மறுசுழற்சி பொருட்களுக்கு ஏற்ப (குறைந்தபட்சம் 2 கிலோ) கல்வி உதவி பொருட்கள் - பேனா, நோட், ஓவியப் புத்தகம், பள்ளி பைகள் மற்றும் பல பரிசாக வழங்கப்படுகின்றன. 

 இத்துடன், முன்னர் நடைபெற்ற Project Recover நிகழ்வுகளின் காணொளியையும் இணைத்துள்ளோம். இந்த முயற்சியில் உங்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் பங்கேற்க ஊக்குவித்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

 நன்றி 

 ஸ்ரீ துர்கா மெட்ரிக் பள்ளி மற்றும் ஒளிரும் மதுரை குழு

A Common Man

Post a Comment

Previous Post Next Post